தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தப்பியோடிய கரோனா நோயாளி மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு..!

கோயம்புத்தூர்: இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

corona-patient-who-fled-the-hospital
corona-patient-who-fled-the-hospital

By

Published : Jul 7, 2020, 10:38 PM IST

திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியைச் சேர்ந்த 50 வயது முதியவர் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் இன்று(ஜூலை 7) மாலை மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து தனது மகனை செல்போனில் அழைத்து அங்கிருந்த தன்னை கூட்டிச் செல்லும்படி தெரிவித்துள்ளார்.

அதில் அதிர்ச்சியடைந்த அவரது மகன் மருத்துவமனைக்கு அருகிலிருக்கும் நண்பர்களுக்கு தந்தையின் புகைப்படத்தை அனுப்பி விவரத்தை கூறியுள்ளார். அதன்படி, அவர் சிங்காநல்லூர் இந்தியன் வங்கி முன்பு கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:ஒரே நாளில் 65 பேர் கரோனா சிகிச்சைக்காக அனுமதி

ABOUT THE AUTHOR

...view details