தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா இரவு ஊரடங்கு: வெறிச்சோடிய கோவை - கரோனா பரவல்

கோயம்புத்தூர்: கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் கோவை மாநகரச் சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.

கரோனா இரவு ஊரடங்கு: வெறிச்சோடிய கோவை
கரோனா இரவு ஊரடங்கு: வெறிச்சோடிய கோவை

By

Published : Apr 21, 2021, 10:34 AM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசுத் தடுப்பு நடவடிக்கையாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக இரவு 10 மணிமுதல் காலை 4 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு நேற்றுமுதல் (ஏப். 20) அமலுக்கு வந்தது. இதனையொட்டி இரவு 9 மணி அளவில் கோவையில் உள்ள முக்கியச் சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் கடைகளை அடைக்குமாறு அறிவுறுத்தினர்.

வெறிச்சோடிய கோவை
காந்திபுரம் நஞ்சப்பா சாலை, கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் 8 மணிமுதல் அடைக்கப்பட்டன. 9.50 மணி அளவில் அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. மேலும், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இரவு 9 மணி அளவில் அடைக்கப்பட்டன.
நகரப் பேருந்து நிலையங்களில் இரவு 7 மணிமுதல் 8 மணிவரை பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பேருந்து சேவைகள் 10 மணிக்கு முன்னதாக நிறுத்தப்பட்டதால் தொலைதூரப் பேருந்துகள் இயக்கப்படும் ஆம்னி பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், உக்கடம் நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


இரவு நேர ஊரடங்கு காரணமாக அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காட்சியளித்தன.

இதையும் படிங்க:டில்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details