தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 31) ஒரே நாளில் 5 ஆயிரத்து 881 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ஐந்தாயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு! - கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை
கோவை: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 169 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
![கோவையில் ஐந்தாயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு! Corona impact approaching 5,000 in Coimbatore!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:21:57:1596210717-tn-cbe-05-corona-update-photo-script-tn10027-31072020183638-3107f-1596200798-766.jpg)
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இன்று (ஜூலை 31) ஒரே நாளில் 169 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,821 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,029ஆக உயர்ந்தது. அதே சமயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.