கோவை மாவட்டம் இருகூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அரசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கண்ணனுக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது.
இதனால் அச்சமடைந்த அவர், தனக்கு கரோனா காய்ச்சல் வந்து விட்டதாக அவரது நண்பர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார். மேலும், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் வீட்டிலிருந்து சென்ற கண்ணன், மதியம் வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி உள்ளனர். அப்போது இருகூர் ரயில் நிலையம் பகுதியில் சரக்கு ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.