மத்திய அரசின் அனுமதியின்படி மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதாரத் துறையினர், பயணிகளிடம் தீவிர மருத்துவப் பரிசோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, மே 27ஆம் தேதி சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களிலிருந்து மொத்தம் 367 பயணிகள் கோயம்புத்தூர் விமானநிலையம் வந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அதில் 10 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என 3 பேர், திருச்சியைச் சேர்ந்த 5 பேர், நாமக்கல்லைச் சேர்ந்த 2 பேர் அடங்கும்.