தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கரோனா உயிரிழப்பு 200ஆக அதிகரிப்பு! - Coimbatore corona death

கோவை: இன்று மட்டும் ஐந்து பேர் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது.

கரோனா
ரோனா

By

Published : Aug 18, 2020, 9:35 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மாநில அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஐந்து ஆயிரத்தை தாண்டுகிறது.

அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று (ஆக.18) மட்டும் 392 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்பது ஆயிரத்து 758ஆக உயர்ந்துள்ளது.

அதே போல், தொற்றிலிருந்து 253 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆறு ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஐந்து பேர் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details