தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 18 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு! - கரோனா தடுப்பு நடவடிக்கை

கோயம்புத்தூர்: ஒரே நாளில் 545 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18, 410ஆக அதிகரித்துள்ளது.

Corona damage past 18,000 in Coimbatore!
Corona damage past 18,000 in Coimbatore!

By

Published : Sep 5, 2020, 8:24 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று, தமிழ்நாட்டிலும் கோரதாண்டவத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன்படி இன்று (செப்.5) ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 545 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதேசமயம் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரமாக இருந்து வருகிறது. மீதமுள்ள நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், கோவை மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 323ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:தமமுக தலைவரின் கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details