கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதற்கான பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் கடுமையாகப் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஊரடங்கால் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், ஊஞ்சவேலம்பட்டியில் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு காய்கறி தொகுப்புகளை கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.