நாடு முழுவதும் கோவிட்-19 எனும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் தேசிய ஊரடங்கு உத்தரவு மார்ச் இறுதி வாரம் முதல் தற்போதுவரை அமலில் இருந்து வருகிறது.
கரோனா தொற்றை தடுக்கும் பணியில் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என பலதரப்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவாட்டம் பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் துறை உதவி ஆய்வாளர் மணிமாறன் கோமங்கலம், சிஞ்சுவாடி, தேவனூர்புதூர், கஞ்சம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் கரோனா குறித்த விழிப்புணர்வு பாடல்களை கடந்த 45 நாள்களுக்கும் மேலாக பாடி வருகிறார்.