கோவையில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் துறையினர் பல்வேறு இடங்களில் பல வித்தியாசமான முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சிங்காநல்லூர், ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் கரோனா வைரஸ் விழிப்புணர்வு நாடகங்களை காவல் துறையினர் நடத்தினர்.
கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே கரோனா குறித்த விழிப்புணர்வு மேலும் பாரம்பரிய நடனமான கும்மி ஆட்டம், பறை இசை போன்றவற்றின் மூலமும் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் எமதர்மன் வேடமணிந்த ஒருவரும் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கினார்.
இதை அப்பகுதி மக்களும் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் கண்டுகளித்தனர். அப்போது முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:எமன் வேடமிட்டு கரோனா விழிப்புணர்வு பரப்புரை