சென்னை: தமிழ்நாட்டில் கரோனா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 31ஆம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.
அதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தொடர்ந்து ஒரு வாரம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், போட்டி நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் தீவிர விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் இன்றும் (ஆக.5), நாளையும் (ஆக.6) கரோனா விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு போட்டிகள் பொதுமக்கள், மாணவ மாணவியர்களுக்கு இணைய வழியில் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்போட்டிகள் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அட்டவணையில், "காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுவரொட்டி தயாரிப்பு, ஓவியப்போட்டி, வாசகப் போட்டி உள்ளிட்டவை அனைத்து தரப்பினருக்கும் நடத்தப்பட உள்ளதாகவும், நாளை காலை மீம்ஸ் போட்டியும், பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை பள்ளி கல்லூரி மாணவிகள், மாணவர்களுக்கு மட்டும் வினாடி-வினா போட்டியும் நடத்தபடவுள்ளது.
எனவே பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/comp/home.jsp என்ற சென்னை மாநகராட்சி இணையதள இணைப்பில் தங்களது படைப்புகளை குறித்த நேரத்தில் பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள் வரும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும்.
மாநகராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வு போட்டிகள்! - சென்னை மாநகராட்சி
பொதுமக்களுக்கு கரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
கரோனா விழிப்புணர்வு போட்டிகள்
மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள்,வழிமுறைகளை மாநகராட்சியின் இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரு செயற்பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை