தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொள்ளையடித்து விட்டு தப்பி ஓட முயன்றவர்களை விரட்டிப் பிடித்த காவல்துறையினர்! - Cops

கோவை: நகைக் கடையில் கொள்ளையடித்து விட்டு தப்பி ஓட முயன்ற மூவரைக் காவல்துறையினர் விரட்டிப் பிடித்தனர்.

நகைக் கடை

By

Published : Jul 21, 2019, 7:58 PM IST


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள வடக்கிபாளையம் பிரிவில் நேற்றிரவு காவல்துறையினர் வழக்கம்போல வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியான வகையில் மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்தனர்.

நகைக் கடையில் கொள்ளை

காவல்துறையினர் அவர்களை வழிமறித்தனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரைக் கண்டதும் பைக்கை நிறுத்தாமல் சென்றனர். அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தப்பியோடியவர்களை விரட்டிப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில், நாகூரை சேர்ந்த இலியாஸ் என்பவர் நகைக்கடையில் சுமார் 30கிராம் தங்கம் மற்றும் ஒருகிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பியோட முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையர்களிடமிருந்து நகைகளை மீட்ட காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வேறு ஏதேனும் கொள்ளைச் சம்பவத்தில் அவர்களுக்குத் தொடர்புள்ளதா என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தப்பியோடிய கொள்ளையர்களைக் காவல்துறையினர் விரட்டிப் பிடித்து நகைகளை மீட்ட சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details