தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாய்க்கு மயக்க பிஸ்கட்... 137 சவரன் நகைகள் கொள்ளை... பிடிபட்ட மதுரை பட்டறை சுரேஷ்

கோவை: செல்லப் பிராணிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 137 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை காவல் துறையினர் கைது செய்தனர்.

convict
convict

By

Published : Feb 18, 2020, 12:17 PM IST

கோவை, இடையர்பாளையம் லூனா அப்பார்ட்மென்ட் பகுதியில் வசித்து வருபவர் கான்ட்ராக்டர் கனகராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கனகராஜ் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் வளர்த்து வந்த செல்லப் பிராணிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து, வீட்டின் கதவை உடைத்து, கனகராஜ் மகள் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 137 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், 15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை உடைத்து, சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டிவிஆர்-ஐயும் திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த துடியலூர் காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரள மாநிலம் - மண்ணுத்தி காவலரிடம் கொள்ளையன் ஒருவன் பிடிபட்டான்.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை - இடையர்பாளையம் கான்ட்ராக்டர் கனகராஜ் வீட்டில் 137 சவரன் நகைகள் கொள்ளை உட்பட மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கேரள காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில், துடியலூர் காவல் துறையினர் கேரளா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொள்ளையனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அதில் கொள்ளையனின் பெயர் பட்டறை சுரேஷ் என்பதும்; மதுரை ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.

மேலும் பட்டறை சுரேஷ் மீது கோவையில் மூன்று வழக்குகளும் தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் பல கொள்ளைச் சம்பவங்களில் தேடப்படும் பிரபல கொள்ளையன் என்பதும் தெரிய வந்தது. ‌சுரேஷிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் கார் ஒன்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

காவல் துறையினர் சுரேஷிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளையில் ராஜசேகரன், பாண்டித்துரை, மாரியப்பன் என்கிற கருவாட்டு மாரியப்பன், சுரேஷ் என்கிற சுர்லா சுரேஷ் ஆகியோரும் தொடர்புடையது தெரிய வந்தது. இந்நிலையில், நான்கு பேரையும் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கொள்ளையடித்த பணத்தில் விமானப் பயணம் - பைக்கில் வரும்போது சிக்கிய கொள்ளையர்!

ABOUT THE AUTHOR

...view details