தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்பு பகுதியில் தொடரும் சிறுத்தை நடமாட்டம்; வனத்துறை அலட்சியம் காட்டுவதாக புகார்!

கோவை: மதுக்கரை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை அங்குள்ள வீட்டின் வளர்ப்பு பிராணிகளை கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

continuing-leopard-migration-forest-department-negligence
continuing-leopard-migration-forest-department-negligence

By

Published : Jan 22, 2021, 7:08 AM IST

கோவை மதுக்கரையில் வனப்பகுதியின் அருகில் காந்திநகர் பகுதி உள்ளது. இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வரும் நிலையில், சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் நாய்கள் , ஆடுகளையும் இந்த சிறுத்தை வேட்டையாடி வருகின்றது. இதுவரை 10 க்கும் மேற்பட்ட ஆடுகளும், நாய்களும் சிறுத்தையால் வேட்டையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் குவாரி ஆபீஸ் பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று, சீனிவாசன் என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை வேட்டையாட முயன்றது. ஆனால் நாய் தொடர்ந்து குரைக்கவே நாயை விட்டுவிட்டு சிறுத்தை காட்டுக்குள் ஓடியது. சிறுத்தையிடம் கடிபட்ட நாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள வீடுகளில் வளர்ப்பு பிராணிகள் அதிகம் உள்ளதால் சிறுத்தை அதே பகுதியில் சுற்றித் திரிவதாகவும், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குடியிருப்பு பகுதியில் தொடரும் சிறுத்தை நடமாட்டம்

இதனிடையே சிறுத்தையை மதுக்கரை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அதனை வேறு வனப்பகுதிக்கு கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக வகுப்புகள் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details