தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வணிகச் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு - Consultative meeting with trade union representatives at kovai

சென்னை: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கில் கோவை, ஈரோடு கோட்டங்களுக்கு உள்பட்ட வணிகச் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வணிக சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம்
வணிக சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம்

By

Published : Jul 12, 2021, 6:59 PM IST

இக்கூட்டம் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலர் ஜோதி நிர்மலா சாமி, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரான் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

வணிகச் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்
கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தொற்று பாதிப்பினால் ஏற்பட்ட சந்தை நிலவரங்கள் குறித்தும், மீட்புக்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்களுடன் கலந்தாய்வு நடத்தி தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details