கோவை மாவட்ட அரசு கலைக்கல்லூரியில் 2020ஆம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் (செப். 28) தொடங்கியது. இதற்காக மொத்தம் 18 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (செப். 29) மாலை கலந்தாய்வுக் கூட்டம் முடிவடைந்த நிலையில் 1,635 மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சீட் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக 35 மாணவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.