கோவையில் இருந்து மங்களூருவுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வழக்கம்போல் இன்று காலை 6.40மணிக்கு நடைமேடை 3இல் இருந்து புறப்பட்டது.
ரயில் தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றிய தலைமை காவலருக்கு பாராட்டு - Railway Police Station Director Appreciation
கோவை: மங்களூரு ரயிலில் இருந்து தவறி விழ இருந்த பயணியை பாத்திரமாக காப்பாற்றிய காவலரை ரயில் நிலைய இயக்குநர் பராட்டி பரிசளித்தார்.
தலைமை காவலருக்கு பாராட்டு
இந்த ரயிலில் மங்களூரு செல்ல தம்பதிகள் தங்களது பிள்ளையுடன் ஓடும் ரயில் ஏற முயன்றனர். அப்போது கணவன், மகன் முதலில் ஏறிய நிலையில், பெண் பயணி மட்டும் தவறி விழும் நிலையில் இருந்தார். இதைப் பார்த்த ரயில்வே தலைமை காவலர் பாலகிருஷ்ணன் கண நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அவரை ரயில்பெட்டியின் உள்ளே ஏற்றினார்.
இதையும் படிங்க:குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு