கோயம்புத்தூர் : சாய்பாபா காலனி பகுதியில் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பட்ட தூய்மைர் பணி, மருத்துவ முகாமை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று (செப். 21) தொடங்கிவைத்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு மக்களுக்கு தினமும் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. எதிர்க்கட்சியினர் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு முதலமைச்சர் நன்மை அளித்து வருகிறார். 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை இந்த அரசு ஏற்றுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள 100 வார்டுகளிலும் 36.12 கி.மீ தூரம் தூய்மைப்படுத்தபட உள்ளது. மழை நீர் தேங்காமல் இருந்தால் டெங்கு உருவாகாமல் தடுக்க முடியும். மழை நீர், வெள்ளம் தூய்மைபடுத்தும் மெகா பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தடுப்பூசி குறித்து விழுப்புணர்வு
இதுதவிர 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பலன் அடைந்துள்ளனர். ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாகிய பத்திரிகையாளர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு தடுப்பூசி குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். 0மக்கள் தொகை அடிப்படையில் வாரம் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி ஒதுக்கினால் இன்னும் வேகமாக தடுப்பூசி போட முடியும்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கான்கிரீட் போடும் திட்டம்
வன எல்லைகளில் கான்கிரீட் சுவர் கட்டும் திட்டத்திற்கு அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் நிதி ஒதுக்கப்படும். சிறுமுகையில் புலி இறந்தது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. புலியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வின் முடிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் இறப்பிற்கான காரணம் தெரியும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிப்பார்'