கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த சதீஷ்குமார் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இவரும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணபுரிந்த கவிதா என்ற பெண் காவலரும் தனிமையில் இருந்த சிசிடிவி காட்சிகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
சிசிடிவி வீடியோவைக்காட்டி பணம் பறிக்கும் பெண் காவலர்! - கோவை
கோவை: தனிமையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தன்னிடம் பணம் பறிப்பதாக பெண் காவலர் மீது, ஒண்டிபுதூரைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து கோவை மாவட்ட காவல்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டபோது, இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தனர். இதனையடுத்து காவலர் கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிசிடிவி விவகாரம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரை நேற்று நேரில் சந்தித்தார்.
அப்போது, தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த மைதிலி என்பவர் மூலம் பெண் காவலர் கவிதாவின் அறிமுகம் கிடைத்ததாகவும், அதன்பின் அவருடன் பல இடங்களில் தனிமையில் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தாங்கள் தனிமையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கவிதாவும், மைதிலியும் தன்னிடம் பணம் பறித்து வருவதாகக் கூறிய டிராவல்ஸ் அதிபர், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.