பொள்ளாச்சி அடுத்துள்ள ஆத்து பொள்ளாச்சி ஊராட்சியில் எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மகள் சரண்யா குமாரி (22). இவர் உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்துவருகிறார் .
சிறுவயதில் காய்ச்சலால் கால்கள் பாதித்து மாற்றுத்திறனாளியான இவர் ஆத்து பொள்ளாச்சி எட்டாவது வார்டில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து மூன்று பேர் போட்டியிட்ட நிலையில், 383 வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகளில் 137 வாக்குகள் பெற்று சரண்யா குமாரி வெற்றிபெற்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை ருசித்த கல்லூரி மாணவி பின்னர், சரண்யா குமாரி நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "இங்கு வசிக்கும் மக்கள் என்னை ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் அடிப்படை பிரச்னையான குடிநீர் வசதி சாலை வசதி மின்சார வசதி, முன்னுரிமை கொடுத்து மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க பாடுபடுவேன். வரும் தலைமுறையினர் என்னைப்போல் இளம்வயதில் மக்களுக்காகப் பாடுபடத் தேர்தலில் நின்று வெற்றிபெற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: களைகட்டும் கோவை விழா - கலக்க காத்திருக்கும் இயற்கை விசைப்படகுகள்!