குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் மாணவர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் இந்தியாவில் மதச்சார்பின்மையை உடைக்காதே, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை உடைக்காதே என்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
CAA-வை நீக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்! - குடியுரிமை சட்டம்
கோவை: குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து வஊசி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய கல்லூரியின் மாணவர் சங்க அமைப்பு தலைவர் ராஜா ராபின்சன், 'இந்தியாவில் மதரீதியிலான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அகதிகளாக வரும் மக்களுக்கு ஆதரவு அளிக்காமல், மதரீதியாக பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது. இந்திய மக்களிடையே பாகுபாடுகள் இருக்கக் கூடாது என்று சட்டம் எழுதிய அண்ணல் அம்பேத்கரின் சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பபெற வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: கவுன்சிலர் பதவிக்கு சீட்டு கொடுக்காமல் ஏமாற்றிய அதிமுக: உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஜினிகாந்த்...!