தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2020, 9:36 PM IST

ETV Bharat / state

குறைந்த விலையில் தானியங்கி சானிடைசர் கருவி: அசத்திய எலக்ட்ரானிக் மாணவர்!

கோயம்புததூர்: சிவானந்தா காலனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், குறைந்த விலையில் தானியங்கி சானிடைசர் கருவியை உருவாக்கியுள்ளதால், அவருக்கு குறுந்தொழில் முனைவோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தானியங்கி சானிடைசர் கருவி
தானியங்கி சானிடைசர் கருவி

கோயம்புத்தூர் மாவட்டம் சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரத். இவர், சித்ரா பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எலக்ட்ரானிக் படித்து வருகிறார். கரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களில் தான் பயின்றுவரும் எலக்ட்ரானிக் துறை தொடர்பாக ஏதாவது ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

மேலும், தற்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய தானியங்கி சானிடைசர் கருவியை தயாரிக்க முடிவு செய்து, மற்ற கருவிகளை காட்டிலும் 50 விழுக்காடு குறைந்த விலையில் உருவாக்கியுள்ளார். இது குறித்து பரத் கூறுகையில், “விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக்கும் வகையில் இந்த தானியங்கி சனிடைசர் கருவியை கண்டுபிடித்துள்ளேன்.

தற்போது வணிக வளாகங்கள், விடுதிகள், கடைகள் என அனைத்துப் பகுதிகளும் தானியங்கி கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறது. மற்ற கருவிகள் விலை அதிகமாக இருப்பதால் குறைந்த விலைக்கு நுகர்வோர்களுக்கு கிடைக்க வேண்டுமென முடிவு செய்ததன் பேரில் தற்போது இந்த கருவியை தயாரித்துள்ளேன்.

தானியங்கி சானிடைசர் கருவி

அரை லிட்டர் முதல் 5 லிட்டர் சாணிடைசர் வரை இதில் பயன்படுத்த முடியும். இதற்காக எனக்கு ஊக்கமளித்த பெற்றோர், ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். மேலும், அவர் தற்போது விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக தானியங்கி மோட்டார் ஒன்றையும் உருவாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான கருவி வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details