கோவை: கேரள மாநிலம் மறையூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் மதன்லால் (22) பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் உடுமலையில் நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கி கல்லூரி சென்று வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வெளியே வந்த மதன்லால் கோவையிலிருந்து பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் கல்லூரி முன்பிருந்த நிறுத்தத்தில் ஏறி உள்ளார். பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் ஏறிய மதன்லால் பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.