கோயம்புத்தூர்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பழனி. இவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரோதாஸ் குமார் (19). கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்தார்.
பிரோதாஸ் குமார் பி.எஸ்.சி வனவியல் (BSC - forest) படிக்க விருப்பப்பட்ட நிலையில், அந்த துறை கிடைக்காததால் பயோடெக் படித்து வந்தார். இதனால் மன உலைச்சலில் இருந்த பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒரு முறை வீட்டில் இருந்த போது தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.