தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாப்சிலிப் பகுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு! - Collector abrupt inspection

கோயம்புத்தூர் : ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டாப்சிலிப் பகுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

டாப்சிலிப் பகுதியில்  ஆட்சியர் திடீர் ஆய்வு
டாப்சிலிப் பகுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

By

Published : Mar 1, 2021, 12:44 PM IST

டாப்சிலிப்பில் எருமைபாறை, கோழிக்கமுத்தி, கூமாட்டி போன்ற பகுதிகளில் மலைவாழ் மக்கள் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆட்சியர் ராசாமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மலைவாழ் மக்கள் ஆட்சியருக்கு ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்றனர்.

இது குறித்து ஆட்சியர் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதியோர் உதவித் தொகை கிடைக்காதவர்கள் மனு அளித்தால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பிடம், மின்சாரம், குடியிருப்பு வசதி போன்ற கோரிக்கைகள் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும்” என்றார்.

இந்த ஆய்வின் போது வன உதவி பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் நவீன் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க :தேமுதிக நிர்வாகிகள் - அதிமுக அமைச்சர்கள் தொகுதிப் பங்கீட்டிற்காக சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details