கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து மாவட்ட வார்டு தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி அலுவலர்கள், மாவட்ட அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநிலங்களவை உறுப்பினர்கள் சின்னராஜ், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் இதில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அதை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க :சென்னை விரைவில் பாதுகாப்பான நகரமாக மாறிவிடும்-ஏ.கே.விசுவநாதன்