கோவையில் கரோனா பாதிப்பில் முதலில் அனுமதிக்கப்பட்ட 26 வயது மாணவி ( ஸ்பெயினிலிருந்து திரும்பியவர்), பெண் மருத்துவர், 10 மாத குழந்தை, வீட்டு பணிப்பெண், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஆகிய ஐந்து பேரும் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மருத்துவமனையில் கடந்த 14 நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின் எவ்வித அறிகுறியும் தென்படாத நிலையில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பாக அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
இருப்பினும் வருகிற 28 நாள்கள் அவர்கள் அவரவரது வீட்டுக்குள்ளேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
இடையில் ஏதேனும் உடல் உபாதைகள் தென்பட்டால் மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். தற்போது அந்த மருத்துவமனையின் 59 பேர் வைரஸ் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ”கோவையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வைரஸ் பாதிப்பு இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதற்காக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.