கோயம்புத்தூர்: டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் விழாவானது வருடந்தோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
13 பேருக்கு நல்லாசிரியர் விருது - ஆசிரியர்களை கெளரவித்த மாவட்ட ஆட்சியர் - கோவை செய்திகள்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
இந்நாளில் சிறப்பாக பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். இவ்வாண்டும் இவ்விருதானது வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆட்சியர் சமீரன் ஆசிரியர்களுக்கு விருதினை வழங்கினார். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, குரும்பப்பாளையம், ஒக்கிலியர் காலனி, ஒண்டிபுதூர், மேட்டுப்பாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலூர், கவுண்டனூர், பிரஸ்காலனி, கல்வீரம்பாளையம், ஏரிப்பட்டி, செஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.