கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, ஆர்.எஸ் புரம் பகுதியில் தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பினர் "மாணவர்களின் மனிதக் கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே" என்ற சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக வெகு நாள்களாக கல்லூரி தேர்வுகள் தள்ளிப்போயின. இதையடுத்து, அரியர் தேர்வுக்காக பணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதைத்தொடந்து அவருக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, இன்று (ஆகஸ்ட் 29) கோவையிலும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.