தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி அம்சவேணி, குழந்தைகள் சௌமியா, சத்யபிரியா, மணிகண்டன், சபரிநாதன் ஆகியோருடன் பீளமேடு அடுத்த தண்ணீர்பந்தல் தியாகி குமரன் வீதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கோவிந்தராஜன் இரண்டாவது மகள் சத்திய பிரியாவுக்கு நுரையீரல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்காக அம்சவேணி அவருக்கு தெரிந்தவர்களிடம் மருத்துவ சிகிச்சைக்கும், குடும்ப செலவுக்கும் பணம் கேட்டுள்ளா்.
பணம் ஏதும் கிடைக்காததால் அம்சவேணி மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கோவிந்தராஜ் வேலை காரணமாக வெளியே சென்றபோது அம்சவேணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து, நேற்று இரவு அரளி விதையை அரைத்து குழந்தைகளுக்கு கலந்துகொடுத்த அம்சவேணி தானும் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.