கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் (26) என்பவர், தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சூலூரில் இருந்து சோமனூர் சென்றார். அப்போது, அவ்வழியே ரயில்வே பீடர் ரோடு என்ற இடத்தில் மழையினால் சாலையில் பள்ளம் விழுந்து தண்ணீர் தேங்கி நின்றது.
மழையினால் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனத்தை இயக்கிய இளைஞர் உயிரிழப்பு - இளைஞர் பலி
கோயம்புத்தூர்: சூலூர் அருகே சாலையில் மழையினால் ஏற்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞர் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார்.
பள்ளம் இருந்தது தெரியாமல் இருசக்கர வாகனத்தை விட்டார். அதன் பிறகு, இருசக்கர வாகனத்தை பள்ளத்திலிருந்து நகர்த்த வாகனத்தை வேகமாக இயக்கினார். அப்போது வாகனத்தின் முன் சக்கரம் மேலே தூக்கிபோது, நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட கௌதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த கோயம்புத்தூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை காவல்துறையினர், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைக்கவசம் அணிந்திருந்த போதும் சாலையில் உள்ள பள்ளத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.