உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைத் தவிர புதிதாக ஏற்பாடு செய்யும் திருமணங்களை நடத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள 60க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் நடக்க இருந்த திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொள்ளாச்சியில் உள்ள திருமண மண்டபங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.