தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் - வெங்கையா நாயுடு - கோயம்புத்தூர் வெங்கய்ய நாயுடு பேச்சு

கோயம்புத்தூர்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Coimbatore Venkaiah Naidu Speech Venkaiah Naidu PSG Colleage Speech Venkaiah Naidu Speech வெங்கய்ய நாயுடு பேச்சு கோயம்புத்தூர் வெங்கய்ய நாயுடு பேச்சு வெங்கய்ய நாயுடு பி.எஸ்.ஜி கல்ல்லூரி பேச்சு
Venkaiah Naidu PSG Colleage Speech

By

Published : Feb 21, 2020, 8:41 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "விவாத கலாசாரத்தைத்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஊக்குவிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசித்து விவாதித்து அதன்பிறகு முடிவு எடுக்க வேண்டும் என்பதையே இந்த அரசாங்கமும் விரும்புகிறது.

அதன்படி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய மக்களுக்கு எந்த விதத்திலும் எதிரானது இல்லை. அதுகுறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாமலேயே சிலர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் எதிர்ப்புகளை பதிவு செய்வதற்கும் எல்லா உரிமைகளையும் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால் ஒருபோதும் வன்முறையை அனுமதிக்கக்கூடாது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களான காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை சில மேற்கத்திய நாடுகள் விவாதிக்க விரும்புகின்றன.

வெங்கய்ய நாயுடு பேச்சு

ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இதையும் படிங்க:உலகமயமாக்கல் தமிழை விழுங்கிவிடக் கூடாது - வைரமுத்து பேச்சு

ABOUT THE AUTHOR

...view details