கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி மலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் மலையேற்றம் மேற்கொள்வது வழக்கம்.
ஏழு மலைகளில் மலையேற்றம் செய்து இறுதியாக சுயம்புலிங்கமான வெள்ளியங்கிரி ஆண்டவரை, பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மலையேற்றத்திற்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்குவர். இந்த ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருகை தந்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையையொட்டி குடிநீர், தற்காலிக கழிப்பிட வசதிகள் ஆகியவை செய்யப்பட்டிருந்தன. அதேபோல் வனத்துறையினர் தொடர் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர். மலை உச்சியில் ஒரு சில நேரங்களில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளதால், ஆம்லன்ஸ்கள் வசதியும் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 300க்கும் மேற்பட்ட காவல் துறையின்ர பணியில் ஈடுபட்டனர்.