கோயம்புத்தூர்:கோவையில் போக்குவரத்து மாசை கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (AIR HORN) பயன்படுத்தும் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவையில் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்களில் விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய (air horn) ஏர் ஹார்ன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காற்று அதிக அளவில் மாசடைகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோவை மாநகர காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் AIR HORN-களை, தங்களது வாகனங்களிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி வரும் ஜூன் 26ஆம் தேதி முதல் காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து, பல்வேறு குழுக்கள் அமைத்து கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில், அதிகப்படியாக ஒலி எழுப்பக்கூடிய Air Horn-கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை சோதனையிட திட்டமிட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: பழங்குடியின மக்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு - டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
அப்போது மேற்கொள்ளப்படவிருக்கும் வாகனத் தணிக்கையில், விதிமுறைகளை மீறி AIR HORN-களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அது மட்டும் இன்றி, தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களின் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக 100% விபத்துகளைத் தடுக்கும் நோக்கோடு இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறையைச் செயல்படுத்த உள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் குடிநீர் வரி காலதாமதமாக செலுத்தும்போது வசூலிக்கும் அபராதம் குறைப்பு!
இதனைத் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில், ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ள சோதனையில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீதும் மோட்டார் வாகன விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களுக்கு ஒருவார காலத்திற்குப் போக்குவரத்து பூங்காவில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 10 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை: 29 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு