தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கும்மியாட்டம் ஆடிய இளைஞர்கள்...' - கரோனா விழிப்புணர்வில் சூலூர் காவல் துறை!

கோவை: சாலையில் அத்தியாவசியத் தேவையின்றி நடனமாடிய இளைஞர்களைப் பிடித்து கும்மியாட்டம் ஆட வைத்து, சூலூர் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

cbe
cbe

By

Published : May 3, 2020, 11:59 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், தடையை மீறி வெளியே சுற்றுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

அவர்களைப் பிடிக்கும் காவல் துறையினர் வாகனங்களைப் பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும், பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கியும் வருகின்றனர்.

அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கலங்கல் செல்லும் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி, சாலைகளில் சுற்றித் திரிந்தனர்.

கரோனா விழிப்புணர்வில் சூலூர் காவல் துறை

அவர்களைப் பிடித்த காவல் துறையினர், பாரம்பரிய கலைகளில் ஒன்றான கும்மி ஆட்டம் ஆட வைத்தது மட்டுமின்றி, 'தேவையில்லாமல் வெளியே வரமாட்டோம். கரோனாவை ஒழிப்போம்' என்ற உறுதிமொழியை ஏற்க செய்தும் நூதன தண்டனை வழங்கினர்.

இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:'புற்றுநோயாளிகளை கரோனா எளிதில் தாக்கும்'- ஆய்வில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details