கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தகுந்த இடைவெளியை மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் கணியூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தகுந்த இடைவெளியை கண்காணிக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.
கணிப்பொறியியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் ’சோசியல் பிரைமர்’ என்ற இந்த கண்காணிப்பு கருவியை உருவாக்கியுள்ளனர். கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி மாணவர் ரோஷித் கூறுகையில், ”பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ’சோசியல் பிரைமர்’ என்ற மென்பொருளை இணைத்து, தகுந்த இடைவெளி தூரத்தை அதில் உள்ளீடு செய்துவிட்டால், பொதுமக்கள் எங்கு கூட்டமாக தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள் என்பதை சுலபமாக கண்டுபிடிக்க முடியும்.