கோயம்புத்தூர்:மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பில்லியட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான பில்லியர்ட்ஸ் பிரிவில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவி அகில இந்திய அளவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். Billiards and Snooker Federation of India(BSFI) மற்றும் SAGE UNIVERSITY ஆகியவை இணைந்து தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டிகளை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் நேற்று (டிச.29) வரை போட்டிகள் நடைபெற்றன.
அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கோவையை சேர்ந்த SSVM (தனியார்) பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சிநேந்ரா பாபு தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டார். இவர் 21 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான பில்லியர்ட்ஸ் பிரிவில் அகில இந்திய அளவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.