பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த சஸ்மிதா என்ற மாணவி 199.67 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஹைதராபாத்தில் 11, 12ஆம் வகுப்புகளை முடித்தவர். இவர் சென்னை சி.இ.ஜி கல்லூரியில் கணிணி அறிவியல் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பொறியியல் தரவரிசைப் பட்டியலில் கோவை மாணவி முதலிடம் - எஸ்.பி. வேலுமணி வாழ்த்து - கோவை மாணவி முதலிடம்
கோவை: பொறியியல் தரவரிசைப் பட்டியலில் கோவை மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Coimbatore student tops engineering rankings
இந்நிலையில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவரது ட்விட்டர் பக்கத்தில் “முதலிடம் பிடித்த கோவை மாணவி, மூன்றாம் இடம் பிடித்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆகிய இருவருக்கும் தாங்கள் விரும்பிய பாடங்களைக் கற்று வாழ்வில் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய சரக்கு சேமிப்பு கிடங்கை நிறுவிய அமேசான்..!