தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை - கந்துவட்டிதான் காரணம் என எஸ்பி தகவல்! - etv bharat tamil

வடவள்ளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் குறித்து கோவை எஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.

4 people suicide reason to a vested interest
கோவையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

By

Published : Jul 26, 2023, 1:59 PM IST

கோவையில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலைக்கு கந்துவட்டி தான் காரணம் என எஸ்.பி தகவல்

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் தொலைத்த மற்றும் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று 30 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "இன்று 30 லட்சம் மதிப்பிலான 145 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போதை இல்லா கோவையை உருவாக்கும் பொருட்டு, "MISSION KALLURI" திட்டம் தொடங்கப்பட்டு, போதைப் பொருள் குறித்தான விழிப்புணர்வு கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், போதைப் பொருள் குறித்தான புகார்களை அளிப்பதற்கு 90032 51100 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் இருந்து 4 கோடி ரூபாய் மதிப்பிலான திருட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 298 போதைப் பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4,310 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசால் நிர்ணயித்த நேரங்களைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட 34 ஆயிரத்து 350 மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போக்சோ வழக்குகளை பொறுத்தவரை இந்த ஆண்டு தற்போது வரை 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 236 லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 12 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகளும் அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

தொடர்ந்து, அண்மையில் கோவையில் பைக் திருட்டில் ஈடுபட்டு விபத்தில் உயிரிழந்த இருவர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு, செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்துள்ளார்கள். அவர்கள் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளது. மேலும் அவருடன் இணைந்து உள்ள ஒரு நபர் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடந்த ஆண்டு மட்டும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என பதில் அளித்தார்.

மேலும், வடவள்ளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் கந்துவட்டி விவகாரத்தால்தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும், அதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ரூ.3 லட்சம் கொடுத்து சரி கெட்ட நினைத்தார்கள்" - நெல்லை இளைஞர் கொலை வழக்கில் பெற்றோர் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details