கோவை: அதிமுகவின் அராஜக செயலை கண்டித்தும், ”அதிமுகவை நிராகரிக்கிறோம்" என்ற திமுகவின் கூட்டங்களுக்கும் காவல் துறையினர் ஏற்படுத்திவரும் இடையூறுகள் குறித்து கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதன்காரணமாக காலை 6 மணி முதலே, அவரது வீடு உள்ள குமரன் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், அவர் கோவை செல்லக்கூடாது எனவும் காவலர்கள் தென்றல் செல்வராஜிடம் அறிவுறுத்தினர்.