தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் - வானதி சீனிவாசன் அழைப்பு! - bjp

கோவை காந்திபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் திறப்பு விழாவில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்புவிடுத்தார்.

திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் - வானதி சீனிவாசன் அழைப்பு
திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் - வானதி சீனிவாசன் அழைப்பு

By

Published : May 14, 2023, 6:58 PM IST

Updated : May 14, 2023, 9:58 PM IST

திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் - வானதி சீனிவாசன் அழைப்பு!

கோயம்புத்தூர்:கோவை காந்திபுரம் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு மையத்தை திறந்து வைத்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துகளை கற்றுக்கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இனி கட்டப்படும் அங்கன்வாடிகளுக்கு சோலார் திட்டம் வைத்துள்ளோம். அங்கன்வாடி மையங்களுக்கு அரசு அதிக கவனம் கொடுக்க வேண்டும். கர்நாடகத் தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம். ஆட்சி அமைக்க முடியாததற்கான காரணத்தைக் கட்சி ஆராயும்.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்றும் வகையில் கர்நாடகத் தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்துகிறது. மக்களிடம் நெருக்கமான அணுகுமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த தேர்தல் முடிவு உள்ளது. தோல்விக்கு குறிப்பிட்ட காரணம் என்று சொல்ல முடியாது. முதலமைச்சர் கனவு கண்டு வருகிறார்.

அப்படி என்றால் திமுக எத்தனை முறை துடைத்தெறியப்பட்டுள்ளது. திராவிட நிலப்பரப்பு என்று மற்ற மாநில முதலமைச்சர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வார்த்தை அலங்காரத்திற்குப் பயன்படுத்துகிறார். காங்கிரஸ் ஏன் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த மாநிலத்தில் தோல்வியுற்றது என்பதை கவனிக்கட்டும். தேர்தலில் வெற்றி, தோல்வி இரண்டுமே சகஜம்.

திமுக எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. டபுள் டிஜிட்டில் கூட இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
பாஜகவின் வழக்கமான வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. ஈரோடில் இடைத்தேர்தல் நடந்தது. ஏன் ஒரு சட்டமன்றத்திற்கு அவ்வளவு அமைச்சர்களை வைத்து வேலை செய்தார்கள். தோல்வியின் காரணங்களை ஆராய்வோம்.

சரி செய்ய முயற்சிப்போம். சொந்தத் தொகுதியில் தோற்கப் பல காரணம் இருக்கலாம். சி.டி. ரவி தோல்வியுற்றதால் தமிழ்நாட்டை வழிநடத்த முடியாது எனச் சொல்ல முடியாது. அண்ணாமலை அவர் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளார். மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு கர்நாடகத்தின் தோல்வி பிரச்னையாக இல்லை.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை. அப்போதும் முழுமையாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவினர் ஜெயித்தனர். மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள். பாஜக ஆட்சி நூறு சதவீதம் உறுதி. திருமாவளவன், தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்குத் தீர்வு கிடைக்காது என்பதை 2 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறார்.

எந்தப் பட்டியல் இன பிரச்னைக்கும் தீர்வு காண முடியவில்லை. எதற்காக திருமாவளவன் அங்கு உள்ளார். திருமா சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி, பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். வாரிசு அரசியல், குடும்ப அரசியல் தான் திராவிட மாடல் என நிரூபிக்கின்றனர்” என பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"செவிலியர்கள் பணி விவகாரத்தில் 'விரக்தியை நோக்கி' செல்கிறது திமுக" - ஓபிஎஸ் விளாசல்!

Last Updated : May 14, 2023, 9:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details