தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிளாஸ்டிக் கழிவுகளால் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம்.. - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உணவு என யானைகள், காட்டு மாடுகள் உண்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள்
பிளாஸ்டிக் கழிவுகள்

By

Published : Dec 5, 2022, 6:40 AM IST

கோவை:வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 56 தேயிலைத் தோட்டகள் உள்ளன.

வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் காட்டு மாடுகள், வரையாடுகள், யானைகள், புலி, சிறுத்தைகள் என பல விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

காடுகள் சூழ்ந்து காணப்பட்டாலும் அதிகமாக தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களும், சுற்றுலா பயணிகளும் வீசும் குப்பைகளை உணவு என விலங்குகள் சாப்பிடுகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளால் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம்

தேயிலை தோட்டப் பகுதிகளில் உலா வரும் காட்டு யானை உள்ளிட்ட விலங்குகள் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. வனத்துறையும் மற்றும் நகராட்சி இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'இதுக்கு நடந்தே போயிருக்கலாம்' - பேருந்தினுள் குடைபிடித்த மக்கள் குமுறல்

ABOUT THE AUTHOR

...view details