கடந்த நவம்பர் 26ஆம் தேதி இரவு பள்ளி மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை தனது காதலனுடன் கொண்டாடுவதற்காக கோவை சீரநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் மாணவியின் காதலனை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நான்குபேரை காவலர்கள் ஏற்கனவே கைது செய்திருந்த நிலையில் முக்கிய குற்றவாளி மணிகண்டன், பப்ஸ் கார்த்திக்கை காவலர்கள் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தச் சூழ்நிலையில், மணிகண்டன் இன்று தாமாக முன்வந்து கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.