தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'படித்த பட்டதாரிகள் எப்படி துப்புரவு செய்வார்கள்' - கலங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் - coimbatore sanitary workers protest before Collectorate

கோயம்புத்தூர்: நிரந்தரப் பணி நியமனம் வழங்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

coimbatore sanitary workers protest before Collectorate for Permanent work appointment
coimbatore sanitary workers protest before Collectorate for Permanent work appointment

By

Published : Mar 9, 2020, 3:07 PM IST

சில நாள்களுக்கு முன் கோயம்புத்தூர் மாநகர துப்புரவுத் தொழிலாளர்களின் காலி பணியிடங்களுக்கு படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் பலரும் துப்புரவுத் தொழிலாளர் பணிக்குத் தேர்வாகினர்.

இதனைக் கண்டித்தும், பல நாள்களாக தினக்கூலி துப்புரவுப் பணியாளர்களாக வேலை செய்துகொண்டிருக்கும் பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரியும் 500-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டும் என்றும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர்கள் படித்த பட்டதாரிகள் என்பதால் அவர்கள் இந்த வேலையை செய்வார்களா என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இதில் அரசு பணம் பெற்றுக்கொண்டு படித்தவர்களுக்கு வேலை வழங்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.

துப்புரவுத் தொழிலாளர்கள் சாலை மறியல்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்பேத்கர் துப்புரவு தொழிலாளர் சங்க செயலாளர் செல்வம், "கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு துப்புரவுப் பணியாளர்களுக்கான நியமன ஆணையை 310 பேருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கியுள்ளார்.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. புதிதாகப் பணி ஆணை பெற்றவர்கள் 5 லட்சம் ரூபாய் வரை கொடுத்து பணி நியமணம் பெற்றுள்ளனர். படித்த பட்டதாரிகள் எவ்வாறு நாங்கள் செய்யும் இந்தப் பணியினை மேற்கொள்வார்கள். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை துப்புரவு வேலைக்கு செல்ல மாட்டோம்" என்றார்.

இதையும் படிங்க... 'குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தாங்கய்யா' - துப்புரவுத் தொழிலாளி கண்ணீர் மனு

ABOUT THE AUTHOR

...view details