கோவை விமான நிலையம் பின்புறம் இளைஞர் ஒருவர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழிப்பறி கும்பலின் வெறிச்செயல்... இளைஞர் கொடூரமாக கொலை! - coimbatore airport backside tasmac murder
கோவை: விமான நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வந்த நபர், வழிப்பறி கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனியைச் சேர்ந்த 24 வயதான விக்னேஷ், கோவையில் தங்கி தனது உறவினரின் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்றிரவு கோவை விமான நிலையத்திற்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் விக்னேஷ் குடித்துவிட்டு திரும்பியபோது 4 பேர் கொண்ட கும்பல் அவரை தடுத்து நிறுத்தி குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
ஆனால், விக்னேஷ் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பலில் ஒருவர், விக்னேஷின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த விக்னேஷை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பீளமேடு காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TAGGED:
coimbatore airport murder