தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

DIG Vijayakumar: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை - முதலமைச்சர் இரங்கல் - கோயம்புத்தூர்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் உயிரிழப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Coimbatore range DIG Vijayakumar committed suicide in his camp office
Coimbatore range DIG Vijayakumar committed suicide in his camp office

By

Published : Jul 7, 2023, 8:03 AM IST

Updated : Jul 7, 2023, 11:46 AM IST

கோவை சரக டிஐஜி விஜயகுமார் அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார்

கோயம்புத்தூர்: கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் (45) பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விஜயகுமார் கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று காவல் துறை பணியில் இணைந்தார். திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர் கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், டிஐஜியாக கடந்த ஜனவரி 6ஆம் தேதி கோவை சரக காவல் துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை 6.50 மணியளவில் நடைபயிற்சி முடித்துவிட்டு பந்தைய சலையில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வந்துள்ளார். பின்னர் அவருடைய மெய் பாதுகாவலர் ரவி என்பவரிடம் கைத்துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தனது அறைக்குள் சென்றுள்ளார். இதன் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விஜயகுமார் நேற்று இரவுதான் துணை ஆணையர் சந்தீஷ் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று வந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்தார் என தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து டிஐஜி விஜயகுமார் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயகுமார் தேனி மாவட்டம் போடி அனைக்கரைபட்டியைச் சேர்ந்தவர். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி நாடார் சரஸ்வதி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து உள்ளார். தேனி ரத்தினம் நகரில் விஜயகுமாரின் தாய், தந்தை மற்றும் அவரது தங்கை உள்பட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

விஜயகுமாரின் தாய் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார். தனது மகன் தற்கொலை செய்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமாரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும், தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடல் தேனி ரத்தினம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு மாலையில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாகதான் விஜயகுமார் தேனி வந்து தனது தாய், தந்தை ஆகியோரை சந்தித்துச் சென்றதாக கூறப்படுகிறது. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அவரது சொந்த ஊர் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சமூக வளைதளப் பக்கத்தில், “கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் விஜயகுமார் ஐபிஎஸ், இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல் துறைக்குப் பெருமை சேர்த்தவர்.

அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும், காவல் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: டி.ஜி.பி அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனு பெறப்படும்- சங்கர் ஜிவால் அறிவிப்பு!

Last Updated : Jul 7, 2023, 11:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details