தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தலைவரால் மட்டுமே தமிழ்நாட்டில் மாற்றம் நிகழும்' - ரஜினிகாந்த் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பெருமிதம்! - கோயம்புத்தூர் ரஜினி ரசிகர்கள்

கோயம்புத்தூர் : நகர்பகுதிகளில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மக்களிடையே பேசு பொருளாகி உள்ளன.

ரஜினி போஸ்டர்
ரஜினி போஸ்டர்

By

Published : Sep 9, 2020, 8:42 PM IST

கோயம்புத்தூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற வர்த்தகர் அணியினர், நடிகர் ரஜினிகாந்த் குறித்து கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

'தலைவரால் மட்டுமே தமிழ்நாட்டில் மாற்றம்', ”ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை”, ’அரசியல் புரட்சி, இனி நம் கையில்' என்ற வாசகங்களுடன் இப்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தப் போஸ்டர்களால் நடிகர் ரஜினிகாந்தின் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பேசப்பட்டு வருகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களுக்கு அவரது ரசிகர்கள் போட்டி போட்டு ஒட்டிவரும் போஸ்டர்கள் பரபரப்பைக் கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details