கோவை ஆர்.எஸ்.புரத்தில் பணத்தாள்களின் வரலாற்றை தெரிவிக்கும் வகையில் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல வகையான பணத்தாள்கள், நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட நாணயங்கள், பணத்தாள்கள் மற்றும் காந்தி புகைப்படம் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் தலைகளும் இடம்பெற்றன.
கோவையில் பல்வேறு நாடுகளின் நாணயங்கள் கண்காட்சி - coimbatore coin exhibition
கோவை: ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் வரலாற்றை நினைவுகூறும் வகையில் நாணயக் கண்காட்சி நடைபெற்றது. பல வகையான வித்தியாசமான பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்திய நாணயங்கள், உலகின் 2ஆவது, 3ஆவது பெரிய 500 ரூபாய் நோட்டுகள், சிறிய அளவு வங்கிப் புத்தகம், துப்பாக்கிக் குண்டு வடிவில் உள்ள நாணயம், துணியால் செய்யப்பட்ட நாணயம், மரத்தினால் செய்யப்பட்ட நாணயங்களும் இடம்பெற்றிருந்தன. வெவ்வேறு வகையான கார் வடிவிலான நாணயங்கள், பைக் வடிவிலான நாணயங்கள், கிட்டார் வடிவ நாணயங்கள், இதய வடிவ நாணயங்கள், விலங்குகளின் வடிவில் உள்ள நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.