தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழங்குடியின மாணவிகள் 12ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி - வனத்துறையினர் பாராட்டு! - கோவை மாவட்டச் செய்திகள்

கோவை: பொள்ளாச்சி டாப் ஸ்லிப்பில் வசிக்கும் மலை வாழ் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் ரம்யா, அர்ச்சனா 12ஆம் வகுப்பில் வெற்றி பெற்றதற்கு வனத்துறையினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி
மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி

By

Published : Jul 16, 2020, 7:56 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி - ஆனைமலைப் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப் ஸ்லிப் பகுதியில் காடஸ், முதுவர், மலமலசர் என மலைவாழ் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று(ஜூலை16) 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியாகின. அதில் டாப் ஸ்லிப் காலனியைச் சேர்ந்த ரம்யா 311, எருமைபாறையைச் சேர்ந்த அர்ச்சனா 274 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றனர்.

வனத்துறை சார்பில் ரம்யா, அர்ச்சனாவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

கடந்த சில தினங்கள் முன்பு, பத்தாம் வகுப்புத் தேர்வில் காடம்பாறை மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி கேரளாவில் பயின்று, வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சாதனை மாணவி ஸ்ரீதேவிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details